//மலைகளை வெறும் தடைகளாக மட்டுமே காணும் மனநிலையில், மலைச்சிகரங்களை சவால்களாக மட்டுமே காணும் மனநிலையில் ஒருவன் காண்பது வெறும் அகங்கார தரிசனம் மட்டும்தானே? … வாழ்க்கை நிகழ்வது மானுட அகத்தில், அது தன்னைச்சுற்றிய அனைத்தில் இருந்தும் விதைகளை எடுத்துக்கொண்டு தன்கற்பனையின் உள்ளுணர்வின் ஈரத்தால் அதை முளைக்க வைத்து தன்னுடைய அந்தரங்க வனத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் உலவுவது. ஆம், ஒரு புல்லின் இதழே போதும்…. … இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன் … இந்த என் மன எழுச்சி இதோ மொழியில் பதிவாகிறது. மொழியில்இருக்கும் பல்லாயிரம் அனுபவங்களுடன் அதுவும் இணைகிறது. இனி இதற்கு அழிவில்லை. இது என்றுமிருக்கும்.//

Written by

in

from Facebook
via IFTTT