அன்னைத் தமிழுக்கு ஹார்வர்டில் ஓர் இருக்கை! – ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் ஒரு தமிழ் அர்�

Written by

in

//
தமிழுக்கு ஏன் இருக்கை?

தமிழ் மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்கு கிறது. அண்மையில் செம்மொழியாக வும் இந்திய அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்கவில்லை. பன் னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியா மையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.

நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவு களைப் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?

உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக் கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.

தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல் லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப் படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். அதற்கான ஒன்றாகவே ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது” என்கிறார் அப்பாத்துரை முத்துலிங்கம்.//

நிதி திரட்டும் இணையதளம் – http://ift.tt/1VZLYKj

இந்திய ரூபாயில் அனுப்ப இப்பொழுது முடியாது, கூடிய விரைவில் வசதி செயதவுடன் உங்களால் முடிந்த நிதி அனுப்பி தமிழில் மேன் மேலும் ஆய்வுகள் வர உதவுங்கள்.
from Facebook http://ift.tt/1UJszPa
via IFTTT