//அவர் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. நான் கற்றதை எல்லாம் சிதறடித்தார். மீண்டும் நானே அடுக்கிக்கொண்டபோது சிந்திக்கக் கற்றிருந்தேன். அவருக்கு நேர் எதிராகவே என் சிந்தனைகள் சென்றன. ஆயினும் எனக்கு அவர் ஞானாசிரியர். ஆகவேதான் அவர் எனக்கு ஞானாசிரியர். ஓஷோவின் முதல் பணி என்பது உடைப்பதுதான். நம் பண்பாடு ஆயிரம் ஆண்டுத் தொன்மை கொண்டது. ஆகவே சிந்தனைகளையும் உணர்வுகளையும் எல்லாம் ஆசாரங்களாக ஆக்கிக்கொள்கிறோம். ஆசாரம் என்பது மாற்றமில்லாதது. கண்மூடித்தனமாக ஒழுக வேண்டியது. ஆசாரங்கள் அனைத்தும் மெய்மை நோக்கிய பயணத்துக்கு எதிரானவை. அந்த உறைநிலையைத் தன் துடுக்குத்தனம் வழியாக, அப்பட்டமான ஆணவம் வழியாக, அராஜகச் சிந்தனை வழியாக, அபத்தம் வழியாக,ஏன் ஆபாசம் வழியாக அவர் உடைத்தார். பகவத் கீதை பற்றிய உரைக்கு நடுவில் ஒரு பாலியல் நகைச்சுவைத் துணுக்கு வருவது இன்றும்கூட இந்தியர்களை நடுங்கவைப்பதுதான்.//

Written by

in

from Facebook via IFTTT