//தொழில்நிறுவனங்கள் பிற மூலப்பொருட்களை எப்படி வாங்குகின்றன? நீரை, மின்சாரத்தை, உழைப்பை, நிர்வாகிகளை? சந்தையில் பேரம்பேசித்தானே? அப்படி நிலத்தையும் வாங்கட்டுமே. புனிதமான சுதந்திரச் சந்தை என ஒருபக்கம் கூச்சல். மறுபக்கம் அரசை முன்னிறுத்தி நேரடிக்கொள்ளை, இதைத்தான் இங்குள்ள கார்ப்பரேட் அமைப்புகள் இன்று செய்துகொண்டிருக்கின்றன
நிலத்தைப்பிடுங்கி முதலாளிகளுக்கு கொடுப்பதை நியாயப்படுத்திய ஒருவரிடம் சொன்னேன். தொழில்வளர்ச்சிக்காக அரசு அத்தனை நிர்வாகவியல் படித்தவர்களும் பத்துவருடம் அரசே நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு இந்த தொழில்நிறுவனங்களில் வேலைசெய்யவேண்டுமென ஆணையிட்டால் செய்வீர்களா? மாட்டீர்கள். அமெரிக்காவுக்கு ஓடிப்போவீர்கள். ஆனால் விவசாயி நிலத்தைக்கொடுக்கவேண்டும் இல்லையா?//
from Facebook http://ift.tt/1AWbgkr
via IFTTT