//நம்மில் பெரும்பாலானவர்களின் தாத்தாக்கள் பட்டினி கிடந்தவர்கள்தான். மாடுமேய்த்தவர்கள். பொட்டலில் உழுதவர்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு துளி குருதியையும் வியர்வையாக்கி தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். நம் அப்பாக்கள் பள்ளிக்குச் சென்றார்கள்.நம் அப்பாக்களின் குருதியை உண்டு நாம் கல்லூரிக்குச் சென்றோம்.
ஒவ்வொரு குடும்பமும் தன்னைத்தானே மேலே தூக்கிக் கொள்ள கணம்தோறும் உழைக்கிறது இந்தியாவில். ஒவ்வொரு தனி மனிதனுக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் கண்விழித்திருக்கிறது. வெற்றி பெற்ற ஒவ்வொருவரைத்தொடர்ந்தும் ஒரு குடும்பம் மேலெழுந்து வருகிரது. அது நம்முடைய மிகப்பெரிய ஆற்றல். நமது குடும்ப விழுமியங்கள் நம்மை உருவாக்கிய பெரும் சக்தி
அதைவிட முக்கியமானது நமக்கு கல்விமேல் உள்ள அபரிமிதமான பற்று. ஒவ்வொரு சாமானியனும் கல்வியை உள்ளூர மதிக்கும் தன்மை . தன் மகனுக்கு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொன்ன அந்த எளிய தொழிலாளி ஒரு பெரும் பண்பாட்டின் சாரமான மனநிலையை வெளிக்காட்டுகிறார்.//
from Facebook http://ift.tt/1LSlp54
via IFTTT