காந்தியின் சிலுவை

Written by

in

//இந்தியாவின் வரலாற்றில் காந்தியின் காலகட்டம் போல மகத்தான இலட்சியவாதம் பொங்கிப்பெருகிய ஒரு சூழல் என்றும் இருந்ததில்லை. காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் சென்ற இடமெல்லாம் பிறரை மகாத்மாக்கள் ஆக்கினார் என்பதனால்தான். அவரிடம் பேசியவர்கள் எல்லாரும் மகாத்மாக்கள் ஆக மாறினார்கள் என்பதனால்தான் காந்தி ஒரு மகாத்மா.

யோசித்துப்பாருங்கள். நம்முடைய ஒவ்வொரு ஊரிலும் காந்திமீது பற்று கொண்டு தன் உடைமைகளைத் துறந்து உறவுகளைத் துறந்து உயிரையும் இழக்கத்துணிந்து தேசவிடுதலைக்காகக் கிளம்பிச்சென்ற ஒரு காந்தியவாதி இருப்பார். தன்னலம் சிறிதும் இல்லாமல் அவர் பொதுநலனுக்காக வாழ்ந்திருப்பார். நாம் கனவிலும் நினைக்கமுடியாத செயல்களை சர்வசாதாரணமாகச் செய்திருப்பார். காந்தியால் ஆன்மா தட்டி எழுப்பப்பட்டு தாங்களும் காந்திக்கு நிகரானவர்களாக ஆன ஒரு இருநூறுபேரையாவது நாம் உலக வரலாற்றில் பட்டியல் போடமுடியும். மார்ட்டின் லூதர் கிங் முதல் நெல்சன் மண்டேலா வரை. ஆச்சாரிய வினோபா பாவே முதல் ஆங் சான் சூகி வரை.//
from Facebook http://ift.tt/1GulfwL
via IFTTT