//இந்துஞானமரபு என்று நாம் இன்று சொல்லும் இந்தப்பாரம்பரியம் என்பது மூவாயிரம்வருடம் தொடர்ச்சியாக வளர்ந்த அந்த உரையாடலின் விளைவே. அந்த உரையாடலின் வழியாக உருவான ஒத்திசைவே இந்திய சமூகத்தை உருவாக்கியது. இந்திய சமூக உருவாக்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான தொகுப்புச்செயல், ஓர் இணைப்புப்பணி, ஒரு சமரசநிகழ்வு.
…
மத்தியக்கிழக்கின் ஒற்றைத்தரிசன மதங்கள் பரவிய நிலங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது இந்தியப்பெருநிலத்தின் வரலாறு பெரும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. இங்கே பண்பாட்டுக்கலப்பு நடந்துள்ளதே ஒழிய பண்பாட்டு அழிப்பு நிகழவில்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்த பண்பாட்டுக்கூறுகள் கூட இன்றும் அழியாமல் நீடிக்கின்றன. இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகள் எதுவுமே முற்றாக அழிந்ததில்லை.காரணம் இங்கே நடந்தது கொள்வதும் கொடுப்பதும் அடங்கிய ஒரு பண்பாட்டு உரையாடல்தான்.
..
இந்த பன்மைத்தன்மை, உரையாடல்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம்தான் இந்திய மரபின் வெற்றிக்கும் சிறப்புக்கும் காரணம்.//
from Facebook http://ift.tt/1GSvbCk
via IFTTT