kaani.org

Written by

in

இதைப்படித்தப்பின்னும் பால் சாப்பிடனும்னு தோனுமா?

//முதலில் பால் என்பதே சிறு குழந்தைகளுக்காக தாய் கொடுக்கும் ஒரு அரிய உணவு. சிறு பருவத்தில் வளர்சிக்கான ஊக்கி மற்றும் நோய் காப்பு மற்றும் தடுப்புத்தன்மை பெற்ற பானம். சிறு பருவதிற்கு மட்டுமே! முதிர்ந்த பிறகு (தாய்க்கு பால் சுரப்பது நின்றது முதல்) தேவை இல்லை. அப்படி தான் இயற்கை வடிவமைத்துள்ளது. அதிலும் வேற்று இனத்தின் பாலை உட்கொள்வது? தார்மீக, அறநெறி அடிப்படையில் மட்டுமின்றி அறிவியல் பூர்வமாகவும் தவறு. மாடு தனது கன்றின் வளர்ச்சிக்காக சுரக்கும் பாலை, 42 நாட்களில் அதன் கன்றின் எடை இரட்டிப்பாக்க சுரப்பதை நாம் சுரண்ட நமக்கு மிஞ்சியது பல பிரச்சினைகள்! மனித குழந்ததை பிறப்பிலிருந்து எடை இரட்டிப்பாக 180 நாட்களுக்கு மேல் பிடிக்கும்.

ஆனால் இன்றைய பாக்கெட்(ட) பாலில் இருப்பவை என்ன என்ன என்று தெரியுமா? சீழ், உயிரிக்கெதிரிகள்(antibiotics), ஆக்சிடாக்சின், என்று பல.. ஆம்! ஒவ்வொரு பாக்கெட்டிலும் 3-5 சொட்டுக்கள் சீழ் இல்லாமல் பால் இன்று இல்லை என்று கால் நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். பல அறிக்கைகளில் இது உறுதி செய்யப்ப்பட்டுள்ளது. இந்த மாடுகள் மிகவும் கேவலமான சுற்றுச்சூழலில் இருப்பதாலும் அவற்றுக்கு மிகவும் தவறான மிகவும் கேவலமான உணவுகள் கொடுக்கப்படுவதாலும் அவை பற்பல வியாதிகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகின்றன. அதனால் இவற்றுக்கு மிகவும் அதிகமான உயிரிக்கெதிரிகள் கொடுக்கப்பட்டு அவை நமக்கும் வந்து சேருகின்றன. இதனால் நாம் எதாவது உடல் நலக்கேட்டிற்கு மருந்து உட்கொண்டால் அவற்றுக்கு பெரிதும் பயன் இருப்பதில்லை.நம் உடல் உயிரிக்கெதிரிகளுக்கு ஒருவித எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு விடுகிறது.

நான் சில‌ ஆண்டுகள் முன் மஹாராஷ்டிரத்தில் உட்பகுதிகளில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது அந்த சிறு கிராமங்களிலும் பாலில் மெல்லிய தாள்களை (tissue paper)கரைப்பதைக்கண்டேன். அதுவும் கொழுப்பு தரத்தை அதிகம் காட்டி அதிக லாபத்திற்காக! இப்பொழுது அது எல்லா ஊர்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு உத்தியாக இருக்கிறது.//
from Facebook http://ift.tt/1hNY9f6
via IFTTT