//நம் மனம் என்பதை கவனித்தால் அது எப்போதும் படிமங்கள் மற்றும் குறியீடுகள் வழியாகவே செயல்படுகிறதென்பதைக் காண்பீர்கள். அப்படிமங்கள் நமக்கு நாம் வாழும் சூழலில் இருந்து கிடைக்கின்றன. அச்சூழல் என்பது நம்முடைய பண்பாட்டால் உருவாக்கபப்ட்டது. பல்லாயிரம் வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு மாபெரும் கட்டுமானம் அது. … பண்பாடு என்பது நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றதல்ல. நாம் மீன்களாக நீந்தும் கடல் அது … நான் மதத்தைப் பற்றியும் அதையே சொல்வேன். உங்களுக்கு கடவுள் வேண்டாம் என்றிருக்கலாம். எனக்கும்தான் கடவுள் இல்லை. ஆனால் எனக்கு மதம் தேவை. மதத்தின் கட்டமைப்பு அல்ல. நம்பிக்கை அல்ல. அதன் மாபெரும் குறியீட்டமைப்பு. அதன் மாபெரும் ஆழ்மனக்கட்டமைப்பு. அதன் பிரம்மாண்டமான மரபுத்தொடர்ச்சி. அதை இழந்தால் நாம் காட்டுவாழ்க்கையில் இருந்து மீன்டும் ஆரம்பிக்கிறோம் ///

Written by

in

from Facebook
via IFTTT