// அவர் மேலும், “அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்தோம். கல்வி புகட்டுவதில் மட்டும் சிக்கல் இல்லை. அடிப்படையாக இந்த பாடத்திட்டதிலேயே பிரச்னைகள் இருக்கிறது என்று. ஆம், இந்த கல்வி மட்டும் ஒழுக்கத்தை, நியாயத்தை கற்பித்திருந்தால், நன்கு படித்த எங்கள் சக ஆசிரியர்கள் எங்களிடம், ‘நீங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குங்கள்’ என்று சொல்லி இருக்கமாட்டார்கள் அல்லவா…? ஆக அடிப்படையாக கல்வியிலேயே ஏதோ சிக்கல் இருக்கிறது. இது அறத்தை போதிக்கவில்லை என்பதை உணர்ந்தோம்”. … “இந்த கல்வி முறை நுகர்வை கற்பிக்கிறது. நுகர்வில் மட்டும் சந்தோஷம் அடையுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஏனெனில், இது நிறுவனத்தின் கைக்கூலியால் (East India Company) வடிவமைக்கப்பட்ட கல்வி முறை. இதை மாற்றாமல் உண்மையில் விடுதலை இல்லை … இப்போதுள்ள கல்வி முறையில், பாடத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது உங்களின் இயல்பான சிந்தனைகளை சிறை வைப்பது. அதாவது உங்கள் இயல்பில், உங்களை சிந்திக்க விடாமல் தடுப்பது. உங்களது முதலாளிகளுக்கு தேவையானவாறு உங்களை வடிவமைத்து, உங்கள் சுயத்தை அழிப்பது. இதையெல்லாம் தாண்டி, இந்த பாடத்திட்டத்தில் எந்த அறமும் இல்லை. அது ஒழுக்கத்தை சிறிதளவும் கற்று தரவில்லை. … நாங்கள் முன் வைப்பது உள்ளூருக்கு தேவையான கல்வி, நுகர்வை முன்மொழியாத கல்வி. உங்களை உங்கள் இயல்பில் சிந்திக்க வைக்க, உங்களுக்கு பிடித்தமானவற்றை கற்க உதவும் கல்வி, பணம் அதிகம் தேவைப்படாத கல்வி. … அனைத்து குழந்தைகளின் டி.என்.ஏ விலியே தேடல் என்பது இருக்கிறது. … ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொன்றில் விருப்பம் இருக்கும். அதன் இயல்பில் விட்டால், அதற்கு விருப்பமானதைஅது கற்றே தீரும்.///

Written by

in

from Facebook
via IFTTT