Tag: புத்தகம்

  • திருவரங்கன் உலா

    ராதா திருவரங்கன் உலா புத்தகத்தை பற்றி சொன்ன போது நானும் அதை படிக்க ஆர்வம் கொண்டு இனையதளத்தில் உடனே வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

    எற்கனவே ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மூலமும் பொன்னியின் செல்வன் குழுமம் மூலமும் தெரிந்து இருந்தாலும் முழுவதும் தெரியாது.

    படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.

    அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

    அரங்கன் தான் புரியவைக்க வேண்டும்.

    படித்து முடித்தவுடன் உடனே பார்த்து “உன்னுடைய லீலை புரியவில்லை” என்று விண்ணப்பித்தேன்.

  • புத்தகம் – ஆரம்பம்

    புத்தகம் – ஒரு நண்பன்.

    சிறுவயது முதல் நிறைய புத்தகம் படித்திருக்கிறேன், கணிணி சகவாசம் ஆர்ம்பித்த பிறகு மிகவும் குறைந்துவிட்டது.

    ஆரம்ப கால நினைவுகள் கோகுலம் மற்றும் பூந்தளிர் சிறுவர் மாத இதழ் மூலம் அறிமுகம். அதில் வரும் படக்கதைகள் சில நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதில் வரும் குரங்கு கபிஷ் கதைகள் வரைபடங்கள் தெளிவாகவே ஞாபகம் இருக்கிறது.

    மற்றும் இரண்டு கதைகள் மிகத்தெளிவாக நினைவிருக்கிறது.

    ஒன்று, ஒரு பூதம் நாய் வாலை நிமிர்த்த முடியாமல் தோற்ற கதை, ஒருவனுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது, ஒரு பூதம் அவனுக்கு கிடைக்கும், அது அவன் சொல்லும் வேலை எல்லாவற்றையும் செய்ய ஒப்பு கொள்ளும், ஆனால் ஒரு நிபந்த்னை, அதற்கு வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் அவனை தின்றுவிடும். முதலில் ஒப்புக் கொள்ளும் அவன் இறுதியில் அதற்கு வேலை கொடுக்கமுடியாமல் பயப்படும் பொழுதும், அவனுடை மனைவியோ மகளோ நாய் வாலை நிமிர்த்த சொல்ல அது முயற்ச்சித்து முடியாமால் தோல்வி அடைந்த்து ஒடிவிடும்.

    ஒரு கிராமத்தில் ஒரு அரக்கன் நினைத்த நேரம் வந்து கிடைத்தவரை கொன்று தின்றுவிடுவான்,  இதை தவிர்க்க அந்த ஊர் மக்கள் அந்த் அர்க்கனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, அவன் வருவதற்கு பதில் தாங்களே முறை அமைத்து வீட்டிற்கு ஒருவரை உணவோடு அனுப்பி வந்தார்கள்.  இப்படி இருக்கும் பொழது ஒரு நாள் ஒரு அம்மாவும் அவளுடைய ஐந்து மகன்களும் ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவருடைய முறை வந்தது, அவர்களுக்கு ஒரே மகன், அவர்களுடைய சோகத்தை அறிந்து அந்த அம்மா தன்னுடைய மகனை அனுப்ப சம்மதிக்கிறாள், அவன் சென்று அந்த உணவை சாப்பிட்டுவிட்டு அந்த் அரக்கனையும் கொன்றுவிடுவான். இது பிறகு மகாபாரத கதை என்றும், அந்த மகன் பீமன் என்றும் தெரிந்தது.

    அதற்கு பிறகு ரஷ்ய சிறுவர் மாத இதழ் மிஷா (Misha), அப்பா அதற்கு சந்தாதாரராக இருந்ததால் மாதம் அதை விடாமல் படிப்பேன்.

    பிறகு அண்ணா தான் காமிக்ஸ் புத்தகம் நிறைய வாங்கினான், அதை பிறகு ஒரு நூலகமாக வைக்கும் அளவுக்கு இருந்தது. இப்பவும் அந்த பழக்கம் தொடர்கிறது.

    அப்பா இப்பவும் அதை “என் சொத்தை புத்தகம் வாங்கியே அழிச்சான்” என்று நகைச்சுவையாகவும் எரிச்சலாகவும் சொல்வார்.

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MzI5MTY1NjE0MjkzNTE4NT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

     

  • புத்தகம் – குழந்தைகள்

    புத்தகம் எப்படி என்னை ஆளாக்கியதோ அதே போல் பார்த்தா மற்றும் மீராவுக்கும் அவை துனையாக இருக்க வேண்டும்.  அதே சமயம் அவை மதம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமானதாக இருக்க வேண்டும், அவர்கள் ராமர் யார், க்ருஷ்ணன் யார், பக்தி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அது அவர்களுக்கு எப்படி துனையிருக்கும் என்பது கண்ணனுடைய விருப்பம்.

    பிளிப்கார்ட் இனையதளத்தில் உடனே ஏப்ரல் 21, 2012 ல் The Complete Mythology Collection (71 Single Titles + 2 Special Issues) – Amar Chitra Katha என்ற புத்தகம் வாங்கினேன்,  அடுத்த நாள் அதை பற்றி யோசித்த பொழுது அந்த புத்தக தொகுப்பில் விஷ்ணு மட்டும் அல்லாமல் சிவன் மற்ற கடவுள் பற்றியும் நிறைய புத்தகங்கள் இருந்தன, ஏப்ரல் 23, 2012 அந்த புத்தக தொகுப்பை கேன்சல் (?) செய்துவிட்டு இன்று கீழே உள்ள புத்தகங்களை வாங்கினேன்.

    Here is the summary of your order (ID: OD20523080901) at Flipkart.com

    Items Ordered:
    Stories of Krishna (5 in 1 series) – Anant Pai
    Bhagawat: The Krishna Avatar – Anant Pai (1 qty)
    Elephant Stories (554) – Lakshmi Lal (1 qty)
    Prahlad (537) – Kamala Chandrakant (1 qty)
    Mahabharata (Set Of 3 Volumes) – Amar Chitra Katha (1 qty)
    Epics Collection – Anant Pai,Amar Chitra Katha (1 qty)
    Stories from the Bhagawat (5 in 1 series) – Anant Pai (1 qty)
    Valmiki’s Ramayana – Subba Ra (1 qty)
    Vivekananda (517) – Anant Pai (1 qty)
    Mahatma Gandhi – Gayathri Madan Dutt (1 qty)
    Tulsidas Ramayana – Tulsidad,Amar Chitra Katha (1 qty)
    Dasha Avatar: The Ten Incarnations of Lord Vishnu – Kamala Chandrakant (1 qty)