Tag: பரனூர்

  • பரனூர் – மறக்க முடியாத நாள்

    இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாள்.

    1. இன்று கோகுலாஷ்டமி
    2. முதன் முறையாக கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுடன் பரனூர் சென்றது.
    3. என்னுடைய குருவான திரு ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவை நந்த உற்சவத்தில் கண்டு களித்தது
    4. முதன் முறையாக தைரியமாக அண்ணாவிடம் சென்று அவர் மீது வெண்ணை தடவி அவரிடம் கொஞ்சம் கொடுத்து அதை அவர் என் மார்பில் அடித்தது
    5. கிருத்திகாவுக்கு அண்ணா கன்னத்தில் வெண்ணை அப்பி விட்டது, அதை ஏற்றதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மற்றும் பெருமிதம்
    6. பார்த்தா மற்றும் மீரா அண்ணாவை சேவித்து ஆசிர்வாதம் பெற்றது.
    7. நெடு நாளைக்கு பிறகு தமிழில் நாட் குறிப்பு எழுத ஆரம்பித்தது.

     

    நான் அண்ணாவை முதன் முறையாக தரிசித்த நாள் தெளிவாக நினைவில் இல்லை, அது இன்றும் ஒரு குறை, அது கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுக்கு பதியவேண்டும் என்ற எனது அவா இந்த நாட் குறிப்பின் மூலம் நிறைவேறுகிறது.