அண்ணா தன்னுடைய படத்தை பார்த்து பின்பு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
[pe2-gallery album=”http://picasaweb.google.com/data/feed/base/user/108314701790410993050/albumid/5909688781450224897?alt=rss&hl=en_US&kind=photo” ]
அண்ணா தன்னுடைய படத்தை பார்த்து பின்பு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
[pe2-gallery album=”http://picasaweb.google.com/data/feed/base/user/108314701790410993050/albumid/5909688781450224897?alt=rss&hl=en_US&kind=photo” ]
இன்று ஆங்கில புத்தாண்டு, வழக்கம் போல கோவிலுக்கு சென்று வரலாம் என்று கிருத்திகா. எனக்கு என்றுமே புத்தாண்டு என்பதால் அதுவும் கோவில் என்றால் என்ன கசப்பு. புதியதாக இன்று குருவாயூரப்பன் சென்றுவிட்டு பிறகு ஆஞ்சனேயர் பார்க்க போகலாம் என்றால்.
அப்பவுக்கு சட்டையை கழற்றுவது பிடிக்காது எனவே, நான் வரவில்லை என்றார். நான், பார்த்தா, மீரா, கிருத்திகா மற்றும் அம்மா நுழைந்தோம்.
குருவாயூரப்பனை பார்தேன், தலையில் மயிலறகு, என்னை பார்த்து ஏன் என்னை பார்க்க வருவதில்லை என்று கேட்பது போல் இருந்த்தது.
பார்த்தாவுக்கும் மீராவுக்கும் க்ருஷ்ணாவை காட்டினேன்.
மதியம் உணவு உண்டுவிட்டு கண்ணியில் உட்கார்ந்து இருந்த பொழுது கிருத்திகா மறுபடியும் இஸ்கான் போகலாம் என்றாள்.
உட்கார்ந்து யோசித்த பொழுது, 22வது நாள் (சென்ற சனிக்கிழமை) சென்று வந்த பிறகு தான் பார்த்தா ஆசையாக க்ருஷ்ணா பற்றிய படம் பார்க்க வேண்டினான். க்ருஷ்ணாவின் லீலையே அலாதி. அவனுக்காக யுடூயுபில் (youtube) தேடி ஒரு படத்தை http://www.youtube.com/watch?v=61AcVOgexMo காண்பித்தேன், பிடித்திருந்த்தது, அமர் சித்திர கதைகளோடு சட்டென்று ஒற்றுமைபடுத்தினான்.
அதற்கு பிறகு அவனுக்காக மீண்டும் தேடியதில் சின்ன க்ருஷ்ணா (little krishna) கிடைத்தான். அனிமேஷன் அருமை, அதில் க்ருஷ்ணாவாக வரும் பாத்திரம் அருமை, அந்த குழந்தை முகம், குழல் ஊதும் அழகு, அரக்கர்களை அழிக்கும் அழகு, அனைத்தயும் நேர்தியாக வடிவமைத்திருந்தார்கள். அப்புறம் அதை அவனுக்கு இறக்குமதி செய்து http://www.youtube.com/playlist?list=PLB973DBD69DB69061 மடிக்கணினியில் ஏற்றி கொடுத்தேன். விரும்பி பார்த்தான்.
இன்று மறுபடியும் குருவாயூரப்பனாக தரிசனம். மறுபடி இஸ்கானுக்கு அழைப்பு.
சென்ற முறை சென்ற பொழூது கூட்டமே இல்லை, இந்த முறை அதையும் எதிர்பார்த்து சென்றால், எதிர்பார்க்காத அளவு கூட்டம், கார் உள்ளே செல்ல முடியவில்லை, ஆரம்பத்திலேயே அதை பார்க் செய்துவிட்டு நடந்து பயணம்.
உள்ளே நுழைந்ததும், ஹரே மந்த்ரம் 108 தடவை உச்சரிக்க ஒரு பக்தர் சொன்னார், முதலில் பார்த்தா செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் க்ருஷ்ணாவின் கருணை, ஒவ்வொரு கல்லாக உச்சரித்து தாண்டினான், இறுதியாக மறுபடியும் எல்லா கற்களையும் எண்ணி உறுதி செய்தான். கிருத்திகாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
உள்ளே சென்றோம், அங்கு பஜனை நடந்து கொண்டிருந்தது, ஆச்சர்யமாக அப்பா அதில் கலந்து நடனமாடிக் கொண்டிருந்த்தார்.
க்ருஷ்ணாவின் அழைப்பு, மந்த்ர உச்சரிப்பு, அப்பாவின் நாம சங்கீர்த்தனம், நல்ல சூழல், இந்த நாள் மறக்க முடியாத நாள்.
அன்பில் சுந்தரரஜனை பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் விஸ்வருபா அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணம். வழியிலேயே விஸ்வம்பரா நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியை ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பார்த்தோம்.
ராஜ கோபுரத்திலிருந்து விஸ்வருபா நோக்கி அம்மா மண்டபம் வழியாக செல்ல செல்ல ஆர்வம் அதிகமாகியது, ஆனால் அந்த் வீதியின் அகலம் ஒரு எமாற்றம், 30 அடி இருக்கும், அனால் ஆக்கிரமிப்பு மற்றும் திறந்த் கால்வாய் காரணமாக குறுகி உள்ளது.
உள்ளே சென்று பாலசுப்ரமணியை சந்தித்து அவருடன் பகுதி A மற்றும் பகுதி B ஒவ்வொரு மாடியாக ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். வீடு தேர்வுக்கு முக்கியமாக கோபுர தரிசனம், மதுரகவி ஸ்வாமி நந்தவனம் மற்றும் வாஸ்து.
மதியம் உணவு நேரம் ஆனதால் கீழே இறங்கி பாலசுப்ரமணியின் மகன் மகேஷ் குமாரை சந்தித்து எங்களுடைய தேர்வு பற்றி பேசிவிட்டு, குடும்பத்துடன் உணவு இடைவெளியில் கலந்தாலோசித்து பிறகு சந்தித்து பேசுவதாக கூறி விடைபெற்றோம்.
ஸத்குரு பவனில் உணவு உண்ணும்போது எல்லொருடைய கருத்தையும் கேட்டேன்.
நான் என்னுடைய காரணங்களை பட்டியலிட்டேன். இவற்றை சொல்லும்போது எனக்கும் என்னுடைய முடிவில் ஒரு தெளிவு எற்ப்பட்டது.
ஒரு வழியாக விளக்கம் கொடுத்து, இரண்டு வீடுகளை தேர்வு செய்து திரும்பி விஸ்வருபா சென்றோம். மறுபடி அலசல், ஒன்று நன்றாக இருந்தால், ஒன்று குறை. வசிக்கும் அறை நன்றாக இருந்தால் கோபுர தரிசனம் இருக்காது, பக்கத்து கட்டிடம் எழும்ப வாய்ப்பு, வெளிச்சம், சமையலறை, காற்றோட்டம். கடைசியாக J3 அல்லது c3 தேர்வு செய்து சென்றோம். ஆனால் J3 எற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் திரும்ப ஆலோசனை, J4 கடைசி மாடியாக இருந்தாலும் பரவாயில்லை, வெயில் தாக்கம் குறைவாக இருக்க வழக்கமான தட்டோடு பதிக்காமல் இக்ளு ஓடு பதித்தால் அந்த தாக்கம் இருக்காது என்று மனத்தை தேற்றிக்கொண்டேன்.
1 லகரம் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு வந்தோம்.
வழக்கம் போல நான் மற்றவற்றை பெருமாளிடம் விட்டுவிட்டேன், உனக்கு நான் இங்கு வந்து உன்னை சேவித்து என்னுடைய வாழ்நாளை கழிக்க விரும்பினாள் இதை முடித்து கொடு என்று சொல்லிவிட்டேன்.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MDc4MjMxNjkyMzgyMTUyMT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
இன்று ராதாவுடைய 27வது திருமண நாள், அன்பில் சுந்தரராஜ பெருமாளை பார்க்க திருச்சியிலுருந்து மாந்துரை வழியாக அன்பில் சென்றோம். 108 திவ்ய தேசத்தில் 4வது தேசம். மின்சாரம் இல்லை, ஆனாலும் பெருமாளின் கிடந்த கோலம் அருமையான தரிசனம்.
இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாள்.
நான் அண்ணாவை முதன் முறையாக தரிசித்த நாள் தெளிவாக நினைவில் இல்லை, அது இன்றும் ஒரு குறை, அது கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுக்கு பதியவேண்டும் என்ற எனது அவா இந்த நாட் குறிப்பின் மூலம் நிறைவேறுகிறது.
பார்த்தா ஸான் அகாதமியில் இரண்டாம் வகுப்பில் களிமன் பொம்மை செய்தல் போட்டியில் முதலிடம்.
கிருத்திகா பட்டாம்பூச்சீ எப்படி செய்வது என்று சொல்லித்தந்தாள்.
நண்பன் ராமு அமெரிக்காவிருந்து இந்தியா வந்த பொழுது என்னை சந்திக்க வந்திருந்தான்.
பார்த்தா பிரணவ்வுடனும், மீரா ஸுருதிகாவுடனும் நன்றாக பழகி விளையாடி களித்தார்கள். எனக்கும் ராமுவை பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTY5MDA2MjU0OTg4NDAwNTA1Nz9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
இன்று விளையாட்டு சாமானுடன் பேச்சு, 12 மணி வரை சரியாக துங்காமால் நிரைய தொந்த்தரவு தந்தான்.
பார்த்தா பிறந்த நாள்
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MTE3NTg1OTA1NzM4MTM0NT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MTE5MDQzNzI4MjQ4MDQ5Nz9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]