கிருத்திகா பிறந்த நாள்
Author: thiru
-
திரு பிறந்த நாள்
என்னுடைய பிறந்த நாள். வேலூரில் மம்மி மருத்துவமனையில் பிறந்தேன்.
நான் பிறந்த பொழுது திருப்பதி பிரசாதம் வந்ததாகவும் அதனால் திருமலை என்று பெயர் வைத்ததாகவும் அப்பா சொன்னார்.
பிறகு 2009ல் என்று நினைக்கிறேன், பேசிக்கொண்டு இருக்கும்பொழுது என்னை காலி பண்ண முயற்சித்ததாகவும் தப்பிவிட்டதாக சொன்னார், மேலும் துருவி கேட்டதில் அது போல எற்கனவே இரண்டு முறை நடந்ததாகவும் (கரு கலைப்பு) நான் தப்பிவிட்டதாக தெரிய வந்தது.
முதலில் சிறிது வருத்தமாக இருந்தது, ஆனால் வேண்ட வெறுப்பாக என்னை அவர்கள் வளர்க்கவில்லை. பிறகு அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நான் ஒரு ஃபேரக்ஸ் பால் பவுடர் குழந்தை. 🙂