from Facebook via IFTTT
Category: facebook
-
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?
//கிருஷ்ணன் என்று இன்று நமக்குக் கிடைக்கும் தெய்வஉருவகத்தின் வேர்த்தொடக்கத்தை தேடிச்சென்றால் வேதங்களில் உள்ள இந்திரனைச் சென்றடைவோம். இந்திரன் மூன்று முகங்கள் கொண்டவனாக வேதங்களில் தென்படுகிறான். ஒன்று அவன் வேந்தன். ஆகவே எதிரிகளை அழித்து குடிகளைக் காப்பவன். இரண்டு, அவன் தன் குடிகளிடம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவன். அவர்களை வைத்து விளையாடுகிறான். அவர்களுக்குள் ஊடாடி விளையாட்டுக் காட்டுகிறான். அவர்களை ஏமாற்றுகிறான். அவர்களிடம் பலிபெற்றுக்கொள்கிறான். மூன்று, அவன் பெரும் காதலன். தீராத வீரியம் கொண்ட ஆண்மகன்.
…
இந்த முப்பட்டைக் குணத்தை புரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த மனிதவாழ்க்கையை ,மனித பண்பாட்டுப் பரிணாமத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் ஒரு பெரிய பண்பாட்டு நோக்கு தேவை. அசட்டு நாத்திகம் அதற்கு எந்த வகையிலும் உதவாது.
…
தெய்வ உருவங்கள் அவ்வகையில் காலமற்றவை. அவை நின்றிருக்கும் அகாலத்தில் சமகாலத்தின் ஒழுக்க நெறிகளையோ அறநெறிகளையோ முழுமையாக அவற்றின் மேல் போட முடியாது. இதுவும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தும். கிருஷ்ணனை அல்லது கருப்பனை அல்லது முனியனை ஏன் வழிபடுகிறோம் என்றால் அந்த தொன்மையான வடிவம் சுமந்து நின்றிருக்கும் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அந்த வடிவம் வழியாகவே நம் ஆழ்மனம் சென்றடைய முடியும் என்பதனால்தான்.
//
from Facebook http://ift.tt/2bPx62a -
பிராய்லர் கோழி ஆபத்தான உணவா? – அமைச்சர் பதில்
//அதற்கு பதிலளித்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ‘‘பிராய்லர் கோழி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பிராய்லர் கோழி சாப்பிட்டால் நோய்கள் வரும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை’’ என்றார்.//
இது எப்படி இருக்கு?
from Facebook http://ift.tt/2buBwcE -
திரை விமர்சனம்: அப்பா
சென்ற வாரம் குடும்பமாக பார்த்தோம், குறைகளையும் மீறி முயற்சிக்கும், தைரியத்துக்கும் சபாஷ். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
பெற்றோர்களாக கொஞ்சம் தாமதமாக திருத்திக் கொண்டாலும் சரியாக பாதையில் செல்வதில் மகிழ்ச்சி 🙂
from Facebook http://ift.tt/2bOf5Tz -
Veyilodu Vilayadi – Veyil Video Song 1080p HD | G.V. Prakash Kumar
வெயிலோடு விளையாடி..
இந்த பாட்டில் உள்ள எல்லா விளையாட்டையும் விளையாடலனாலும் முடிந்தவரைக்கும் விளையாடியதில் ஒரு திருப்தி. நம் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க முயற்சிப்போமே!
பார்த்தாவிற்கு அந்த வாய்ப்பு கிடைச்சிகிட்டுருக்கு!
from Facebook https://www.youtube.com/watch?v=EfMgVNqrWPw