என்று சென்றோம் என சரியாக நினைவில் வைத்திருக்கும் வயதில் இல்லை, அம்மாவிடம் கேட்க வேண்டும்.
ஆனால் அந்த வீட்டின் முகப்பு மற்றும் இருந்த தெரு தெளிவாக நினைவு இருக்கிறது. அந்த வீட்டிற்கு நேரே ஒரு தெரு உண்டு. என்ன காரணத்தாலோ எனக்கு அந்த வீட்டில் மெத்தையில் படுத்திருந்தது குறிப்பாக கழுத்தில் வேர்த்து அறுப்பது போல் இருந்தது இன்னும் நினைவு இருக்கிறது. அந்த மெத்தையின் நிறம் சிவப்பு, அந்த அடவு (டிஸைன்), இன்னும் நெரில் பார்த்தால் எப்படி இருக்குமோ அது போல் நினைவு இருக்கிறது. இன்றும் அதே அடவுதான் பெரும்பாலான மெத்தைகளில் இருக்கிறது. அது ரொம்ப நாள் இருந்து நைந்து, அந்த பஞ்சு வேறு மெத்தை (தஞ்சாவூரில்?) ஆகிவிட்டது என்று ஞாபகம்.