Tag: அண்ணா

  • பார்த்தா – அண்ணாவின் உருவம் வரைந்து – அண்ணாவிடம் கையெழுத்து வாங்கினான்.

    அண்ணா தன்னுடைய படத்தை பார்த்து பின்பு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

     

    [pe2-gallery album=”http://picasaweb.google.com/data/feed/base/user/108314701790410993050/albumid/5909688781450224897?alt=rss&hl=en_US&kind=photo” ]

  • அண்ணாவிடன் நாம ஜபம்

    இன்று திரு சந்தான கோபலன் அவர்கள் அண்ணாவிடம் நம்முடைய இணையதளம் செய்தவராக அறிமுகம் செய்தார்.

    நானும் அம்மாவும் அண்ணாவிடம் நாம ஜபம் எடுத்துக்கொண்டோம். ‘ராம ராம’ என்று சொல்லிவிட்டு ‘சொல்லிண்டே இரு’ என்றார்.

    அண்ணாவின் கிருபையால் நாம ஜெபம் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

  • புத்தகம் – ஆரம்பம்

    புத்தகம் – ஒரு நண்பன்.

    சிறுவயது முதல் நிறைய புத்தகம் படித்திருக்கிறேன், கணிணி சகவாசம் ஆர்ம்பித்த பிறகு மிகவும் குறைந்துவிட்டது.

    ஆரம்ப கால நினைவுகள் கோகுலம் மற்றும் பூந்தளிர் சிறுவர் மாத இதழ் மூலம் அறிமுகம். அதில் வரும் படக்கதைகள் சில நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதில் வரும் குரங்கு கபிஷ் கதைகள் வரைபடங்கள் தெளிவாகவே ஞாபகம் இருக்கிறது.

    மற்றும் இரண்டு கதைகள் மிகத்தெளிவாக நினைவிருக்கிறது.

    ஒன்று, ஒரு பூதம் நாய் வாலை நிமிர்த்த முடியாமல் தோற்ற கதை, ஒருவனுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது, ஒரு பூதம் அவனுக்கு கிடைக்கும், அது அவன் சொல்லும் வேலை எல்லாவற்றையும் செய்ய ஒப்பு கொள்ளும், ஆனால் ஒரு நிபந்த்னை, அதற்கு வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் அவனை தின்றுவிடும். முதலில் ஒப்புக் கொள்ளும் அவன் இறுதியில் அதற்கு வேலை கொடுக்கமுடியாமல் பயப்படும் பொழுதும், அவனுடை மனைவியோ மகளோ நாய் வாலை நிமிர்த்த சொல்ல அது முயற்ச்சித்து முடியாமால் தோல்வி அடைந்த்து ஒடிவிடும்.

    ஒரு கிராமத்தில் ஒரு அரக்கன் நினைத்த நேரம் வந்து கிடைத்தவரை கொன்று தின்றுவிடுவான்,  இதை தவிர்க்க அந்த ஊர் மக்கள் அந்த் அர்க்கனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, அவன் வருவதற்கு பதில் தாங்களே முறை அமைத்து வீட்டிற்கு ஒருவரை உணவோடு அனுப்பி வந்தார்கள்.  இப்படி இருக்கும் பொழது ஒரு நாள் ஒரு அம்மாவும் அவளுடைய ஐந்து மகன்களும் ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவருடைய முறை வந்தது, அவர்களுக்கு ஒரே மகன், அவர்களுடைய சோகத்தை அறிந்து அந்த அம்மா தன்னுடைய மகனை அனுப்ப சம்மதிக்கிறாள், அவன் சென்று அந்த உணவை சாப்பிட்டுவிட்டு அந்த் அரக்கனையும் கொன்றுவிடுவான். இது பிறகு மகாபாரத கதை என்றும், அந்த மகன் பீமன் என்றும் தெரிந்தது.

    அதற்கு பிறகு ரஷ்ய சிறுவர் மாத இதழ் மிஷா (Misha), அப்பா அதற்கு சந்தாதாரராக இருந்ததால் மாதம் அதை விடாமல் படிப்பேன்.

    பிறகு அண்ணா தான் காமிக்ஸ் புத்தகம் நிறைய வாங்கினான், அதை பிறகு ஒரு நூலகமாக வைக்கும் அளவுக்கு இருந்தது. இப்பவும் அந்த பழக்கம் தொடர்கிறது.

    அப்பா இப்பவும் அதை “என் சொத்தை புத்தகம் வாங்கியே அழிச்சான்” என்று நகைச்சுவையாகவும் எரிச்சலாகவும் சொல்வார்.

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MzI5MTY1NjE0MjkzNTE4NT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]