Tag: ராதா

  • திருவரங்கன் உலா

    ராதா திருவரங்கன் உலா புத்தகத்தை பற்றி சொன்ன போது நானும் அதை படிக்க ஆர்வம் கொண்டு இனையதளத்தில் உடனே வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

    எற்கனவே ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மூலமும் பொன்னியின் செல்வன் குழுமம் மூலமும் தெரிந்து இருந்தாலும் முழுவதும் தெரியாது.

    படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.

    அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

    அரங்கன் தான் புரியவைக்க வேண்டும்.

    படித்து முடித்தவுடன் உடனே பார்த்து “உன்னுடைய லீலை புரியவில்லை” என்று விண்ணப்பித்தேன்.

  • விஸ்வம்பரா விஸ்வருபா

    அன்பில் சுந்தரரஜனை பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் விஸ்வருபா அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணம். வழியிலேயே விஸ்வம்பரா நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியை ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பார்த்தோம்.

    ராஜ கோபுரத்திலிருந்து விஸ்வருபா நோக்கி அம்மா மண்டபம் வழியாக செல்ல செல்ல ஆர்வம் அதிகமாகியது, ஆனால் அந்த் வீதியின் அகலம் ஒரு எமாற்றம், 30 அடி இருக்கும், அனால் ஆக்கிரமிப்பு மற்றும் திறந்த் கால்வாய் காரணமாக குறுகி உள்ளது.

    உள்ளே சென்று பாலசுப்ரமணியை சந்தித்து அவருடன் பகுதி A மற்றும் பகுதி B ஒவ்வொரு மாடியாக ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். வீடு தேர்வுக்கு முக்கியமாக கோபுர தரிசனம், மதுரகவி ஸ்வாமி நந்தவனம் மற்றும் வாஸ்து.

    மதியம் உணவு நேரம் ஆனதால் கீழே இறங்கி பாலசுப்ரமணியின் மகன் மகேஷ் குமாரை சந்தித்து எங்களுடைய தேர்வு பற்றி பேசிவிட்டு, குடும்பத்துடன் உணவு இடைவெளியில் கலந்தாலோசித்து பிறகு சந்தித்து பேசுவதாக கூறி விடைபெற்றோம்.

    ஸத்குரு பவனில் உணவு உண்ணும்போது எல்லொருடைய கருத்தையும் கேட்டேன்.

    • ராதா – சரி
    • கிருத்திகா – சரி (ஆனால் இன்னும் பள்ளிக்கரனை தான்)
    • மாமா – சரி
    • அம்மா – சரி
    • அப்பா – முதலில் சரி, வற்புறுத்தி கேட்டபோது பிடிக்கவில்லை. அவருக்கு நான் தஞ்சாவூரில் அவர் பார்த்த வீட்டை பிடிக்கவில்லை என்பதால் கோபம், மண் சரியில்லை என்று எதோ காரணம். அடுக்குமாடி குடியிருப்பு அவருக்கு பிடிப்பதில்லை, சிறு நிலம் அதில் வீடு இருக்க வேண்டும். மாமாவுக்கும் அவருக்கும் சண்டை வந்துவிட்டது.

     

    நான் என்னுடைய காரணங்களை பட்டியலிட்டேன். இவற்றை சொல்லும்போது எனக்கும் என்னுடைய முடிவில் ஒரு தெளிவு எற்ப்பட்டது.

    • ஸ்ரீரங்க அபிமானம், கோபுர தரிசனம்.
    • ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருகில் இருக்கிறார்.
    • மதுரகவி ஸ்வாமி அவர்களின் நந்தவனம்
    • விஸ்வம்பரா என்ற பெயர்,  கிருஷ்ண சைதன்ய மஹா பிரபுவின் பெயர்.
    • விஸ்வருபா என்ற பெயர், அவருடைய மூத்த சகோதரர் பெயர்.
    • பண முதலீடு – ஸ்ரீரங்கம் நகரம், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நகரத்திற்கு அருகில் வாங்க முடியாது
    • 2வது வீட்டுக்கான வட்டிக் கடன் மூலம் வருமான வரி சேமிப்பு
    • 2-3 ஆண்டுகளாக சதுர அடி விலை குறையும் என்று எதிர்பார்த்து குறையவில்லை
    • ஏன் 60 லகரம்? வருமான வரி சேமிப்பு – குறைந்தது 1.5 லகரம் சேமிக்க முடியும்.
    • இரண்டு புரமும் திரந்த வெளி, இன்னோரு 100 வருடங்களுக்கு அங்கு கட்டிடம் வருவதர்க்கு வாய்ப்பில்லை.
    • அடுக்குமாடியில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஒரு ஆசை.
    • ஒரு பிடிப்பு, அடிக்கடி வரவேண்டும் என்று தோன்றும்.
    • தரமான கட்டுமானம்.

     

    ஒரு வழியாக விளக்கம் கொடுத்து, இரண்டு வீடுகளை தேர்வு செய்து திரும்பி விஸ்வருபா சென்றோம். மறுபடி அலசல், ஒன்று நன்றாக இருந்தால், ஒன்று குறை.  வசிக்கும் அறை நன்றாக இருந்தால் கோபுர தரிசனம் இருக்காது, பக்கத்து கட்டிடம் எழும்ப வாய்ப்பு, வெளிச்சம், சமையலறை, காற்றோட்டம். கடைசியாக J3 அல்லது c3 தேர்வு செய்து சென்றோம். ஆனால் J3 எற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் திரும்ப ஆலோசனை, J4 கடைசி மாடியாக இருந்தாலும் பரவாயில்லை, வெயில் தாக்கம் குறைவாக இருக்க வழக்கமான தட்டோடு பதிக்காமல் இக்ளு ஓடு பதித்தால் அந்த தாக்கம் இருக்காது என்று மனத்தை தேற்றிக்கொண்டேன்.

    1 லகரம் செலுத்தி முன்பதிவு  செய்துவிட்டு வந்தோம்.

    வழக்கம் போல நான் மற்றவற்றை பெருமாளிடம் விட்டுவிட்டேன், உனக்கு நான் இங்கு வந்து உன்னை சேவித்து என்னுடைய வாழ்நாளை கழிக்க விரும்பினாள் இதை முடித்து கொடு என்று சொல்லிவிட்டேன்.

    கூகுள் வரைபட இணைப்பு

     

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MDc4MjMxNjkyMzgyMTUyMT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

     

     

     

     

  • அன்பில் சுந்தரராஜ பெருமாள்

    இன்று ராதாவுடைய 27வது திருமண நாள், அன்பில் சுந்தரராஜ பெருமாளை பார்க்க திருச்சியிலுருந்து மாந்துரை வழியாக அன்பில் சென்றோம். 108 திவ்ய தேசத்தில் 4வது தேசம். மின்சாரம் இல்லை, ஆனாலும் பெருமாளின் கிடந்த கோலம் அருமையான தரிசனம்.

  • ஸ்ரீரங்க வாசம் – 2

    ராதா மாலை அலுவலகத்தில் இருக்கும் போது அலைபேசியில் அழைத்து மாமா ஸ்ரீரங்கத்தில் சில அடுக்குமாடி குடியிருப்புகளை பார்த்ததாகாவும் அவற்றில் விஸ்வம்பரா கட்டட நிறுவனத்தின் ‘விஸ்வருபா’ என்ற திட்டப்பணியும் கட்டுமானத்தின் தரமும் நன்றாக இருப்பதாகவும், ஸ்ரீரங்கநாதரின் ராஜ கோபுரம் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் சதுர அடி ரூ. 4,100 யும் குறைந்த் பட்சம் 1,300 சதுர அடி ஆன வீட்டிற்கு வரவு செலவு திட்டம் ரூ 60 லகரம் ஆகும் என்றும் தெரிய வந்தது. மாமா சதுர அடி ரூ. 3,800 அந்த இடத்திற்கு தகும் என்றார்.

    விஸ்வருபா திட்டப்பணி அவர்களது இணையதளத்தில் விரிவாக பிரசுரிக்கப் பட்டிருந்த்தது. கோவிலுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, இணைக்கப்பட்டிருந்த் புகைப்படங்கள் விரிவாகவும் ஸ்ரீரங்கநாதரின் ராஜ கோபுரத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள்.

    ஸ்ரீரங்க வாசம் ஆசை மீண்டும் அதிகமாகியது. ஆனால் எனது வரவு செலவு திட்டம் ரூ 30 லகரம், இதுவோ ரூ 30 லகரம் மேலும் அதிகம்.

  • ஸ்ரீரங்க வாசம் – 1

    நண்பர் எஸ்பிஸ் அவர்களிடம் பார்ஸ்ன் அடுக்குமாடி குடியிருப்பு (PARSN) பற்றி சொல்லி அவருடைய கருத்து கேட்டபோது அவை 30 வருடங்களில் தன்னுடைய மதிப்பை இழக்கும் என்று சொன்னார். பார்ஸன் இப்போதைக்கு 12 வருடம் பழையதாகி விட்டது, இன்னும் 15-20 வருடங்களில் அதாவது நான் நிரந்ததரமாக அங்கு செல்லும் போது அது 30 வருடம் பழையதாகி விடும் மற்றும் அதனுடைய மதிப்பு புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக இருக்காது என்று சொன்னார்.

    ராதாவுக்கு அலைபோசில் தொடர்பு கொண்டு பார்ஸ்ன் வேண்டாம் என்றும் புதிய அடுக்குமாடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். அவளும் தேடி சொல்கிறேன் என்றாள்.

    கொஞ்சம் எமாற்றமாக இருந்தாலும், நடப்பதெல்லாம் நன்மைக்கு என தேற்றிக் கொண்டேன்.

  • ஸ்ரீரங்க வாசம்

    பண முதலீடு சம்பந்தமாக வீடு தேடி வருவதாக கிருத்திகா அக்கா ராதாவிடம் தெரிவித்ததாகவும் அதே நேரத்தில் அவளும் ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு இருப்பதாக மாமாவுடைய நண்பர் தெரிவித்ததாக கூறினாள்.

    இது சம்ப்ந்தமாக அப்பாவிடம் தஞ்சாவூரில் பார்க்க சொல்லியிருந்தேன், ஆனால் ராதா ஸ்ரீரங்கம் பற்றி சொன்னவுடன் அங்கு தேடினால் என்ன என்று தோன்றியது.

    அவளுக்கு ரங்கனிடம் அலாதி பிரியம் உண்டு. அதனால் மாமா வேலையில் ஓய்வு பெற்றதும் அங்கு சென்றுவிட வேண்டும் என்ற திட்டத்தில் அதே அடுக்குமாடியில் முயற்சி செய்ததுவும் அது சில காரணங்களுக்காக நடக்காததுவும் நினைவு வந்தது. நாமும் அதே மாதிரி வேலையில் ஓய்வு பெற்றதும் அங்கு சென்று நிரந்தரமாக வசித்தால் என்ன் என்று தோன்றியது. தோராயமாக 30 லகரம் ஆகும் என்று சொன்னாள். நான் அது சம்பந்தமாக மேலும் விசாரிக்க சொன்னேன்.

    எல்லாம் பெருமாள்/ரங்கன் செயல்.