from Facebook
via IFTTT
Category: facebook
-
பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?
//நம் மனம் என்பதை கவனித்தால் அது எப்போதும் படிமங்கள் மற்றும் குறியீடுகள் வழியாகவே செயல்படுகிறதென்பதைக் காண்பீர்கள். அப்படிமங்கள் நமக்கு நாம் வாழும் சூழலில் இருந்து கிடைக்கின்றன. அச்சூழல் என்பது நம்முடைய பண்பாட்டால் உருவாக்கபப்ட்டது. பல்லாயிரம் வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு மாபெரும் கட்டுமானம் அது.
…
பண்பாடு என்பது நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றதல்ல. நாம் மீன்களாக நீந்தும் கடல் அது
…
நான் மதத்தைப் பற்றியும் அதையே சொல்வேன். உங்களுக்கு கடவுள் வேண்டாம் என்றிருக்கலாம். எனக்கும்தான் கடவுள் இல்லை. ஆனால் எனக்கு மதம் தேவை. மதத்தின் கட்டமைப்பு அல்ல. நம்பிக்கை அல்ல. அதன் மாபெரும் குறியீட்டமைப்பு. அதன் மாபெரும் ஆழ்மனக்கட்டமைப்பு. அதன் பிரம்மாண்டமான மரபுத்தொடர்ச்சி. அதை இழந்தால் நாம் காட்டுவாழ்க்கையில் இருந்து மீன்டும் ஆரம்பிக்கிறோம்
///
from Facebook http://ift.tt/1mvhKlP
via IFTTT -
//நம் மனம் என்பதை கவனித்தால் அது எப்போதும் படிமங்கள் மற்றும் குறியீடுகள் வழியாகவே செயல்படுகிறதென்பதைக் காண்பீர்கள். அப்படிமங்கள் நமக்கு நாம் வாழும் சூழலில் இருந்து கிடைக்கின்றன. அச்சூழல் என்பது நம்முடைய பண்பாட்டால் உருவாக்கபப்ட்டது. பல்லாயிரம் வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு மாபெரும் கட்டுமானம் அது. … பண்பாடு என்பது நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றதல்ல. நாம் மீன்களாக நீந்தும் கடல் அது … நான் மதத்தைப் பற்றியும் அதையே சொல்வேன். உங்களுக்கு கடவுள் வேண்டாம் என்றிருக்கலாம். எனக்கும்தான் கடவுள் இல்லை. ஆனால் எனக்கு மதம் தேவை. மதத்தின் கட்டமைப்பு அல்ல. நம்பிக்கை அல்ல. அதன் மாபெரும் குறியீட்டமைப்பு. அதன் மாபெரும் ஆழ்மனக்கட்டமைப்பு. அதன் பிரம்மாண்டமான மரபுத்தொடர்ச்சி. அதை இழந்தால் நாம் காட்டுவாழ்க்கையில் இருந்து மீன்டும் ஆரம்பிக்கிறோம் ///
from Facebook
via IFTTT -
பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
//மலைகளை வெறும் தடைகளாக மட்டுமே காணும் மனநிலையில், மலைச்சிகரங்களை சவால்களாக மட்டுமே காணும் மனநிலையில் ஒருவன் காண்பது வெறும் அகங்கார தரிசனம் மட்டும்தானே?
…
வாழ்க்கை நிகழ்வது மானுட அகத்தில், அது தன்னைச்சுற்றிய அனைத்தில் இருந்தும் விதைகளை எடுத்துக்கொண்டு தன்கற்பனையின் உள்ளுணர்வின் ஈரத்தால் அதை முளைக்க வைத்து தன்னுடைய அந்தரங்க வனத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் உலவுவது. ஆம், ஒரு புல்லின் இதழே போதும்….
…
இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன்
…
இந்த என் மன எழுச்சி இதோ மொழியில் பதிவாகிறது. மொழியில்இருக்கும் பல்லாயிரம் அனுபவங்களுடன் அதுவும் இணைகிறது. இனி இதற்கு அழிவில்லை. இது என்றுமிருக்கும்.//
from Facebook http://ift.tt/1B6hcbf
via IFTTT -
//மலைகளை வெறும் தடைகளாக மட்டுமே காணும் மனநிலையில், மலைச்சிகரங்களை சவால்களாக மட்டுமே காணும் மனநிலையில் ஒருவன் காண்பது வெறும் அகங்கார தரிசனம் மட்டும்தானே? … வாழ்க்கை நிகழ்வது மானுட அகத்தில், அது தன்னைச்சுற்றிய அனைத்தில் இருந்தும் விதைகளை எடுத்துக்கொண்டு தன்கற்பனையின் உள்ளுணர்வின் ஈரத்தால் அதை முளைக்க வைத்து தன்னுடைய அந்தரங்க வனத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் உலவுவது. ஆம், ஒரு புல்லின் இதழே போதும்…. … இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன் … இந்த என் மன எழுச்சி இதோ மொழியில் பதிவாகிறது. மொழியில்இருக்கும் பல்லாயிரம் அனுபவங்களுடன் அதுவும் இணைகிறது. இனி இதற்கு அழிவில்லை. இது என்றுமிருக்கும்.//
from Facebook
via IFTTT -
from Facebook
via IFTTT -
from Facebook
via IFTTT